ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று அதிகாலை 4:32 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.9 ஆகப் பதிவாகியது. இதையடுத்து காலை 9:06 மணிக்கு மற்றொரு நிலடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
எனினும் இந்த நிலநடுக்கங்களால் பெரியளவில் பொருள் சேதமோ, உயிா்ச்சேதமோ ஏற்படவில்லை. இருந்தாலும் ஜம்மு-காஷ்மிர் பகுதிகளில் தொடா்ந்து நிலநடுக்கம் ஏற்படுவது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கடந்த 5 தினங்களில் மட்டும் இதுவரையிலும் 13 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.