ஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பிடிப்பதற்கு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தன. அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென்று துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகளில் ஒருவர் லக்ஷர் ஈ தொய்பா அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது. மற்றொருவர் காஷ்மீரை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து நவீன ஆயுதங்கள் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் சிலர் அந்த பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்று கருதப்படுவதால் தேடுதல் வேட்டையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.