ஜம்மு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் அவ்ஹோவா கிராமத்தில் இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் சிஆர்விஎப் இணைந்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பிறகு துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில் இரண்டு ஏகே ரகத் துப்பாக்கிகள், கையேறி குண்டுகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குல்காம்வில் உள்ள தாகியாவை சேர்ந்த முகமது ஷஃபி கனி மற்றும் முகமது ஆசிப் வானி என காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. மேலும் பயங்கரவாதிகள் இருவரும் ஜெய்ஷ்-முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.