Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் பல வளர்ச்சித் திட்டங்கள்…. தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர்…..!!

மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஒப்புதலை குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பல வளர்ச்சித் திட்டங்களை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து வீடுகள் தோறும் கழிப்பறை கட்டும் பணிகள் ஜம்மு-காஷ்மீரில் முடுக்கிவிடப்பட்டன. திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாநிலமாக ஜம்மு-காஷ்மீர் திகழ வேண்டுமென மத்திய அமைச்சர் கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுவதற்காக அடுத்த வாரம் ஒப்புதல் அளிக்கப்படும் எனவும், எல்பிஜி கேஸ் கொண்டு செல்லும் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.  ஜம்மு-காஷ்மீர் நாடாளுமன்ற உறுப்பினரான ஜுகல் கிஷோர் சர்மா, பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார். இதனால் மக்கள் நேரடியாக பயன் பெறுகின்றனர் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |