ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படையினர் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படையினர் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாதிகளின் தாக்குதலில் ராணுவ அதிகாரி மற்றும் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.