Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்… அதிரடியாக செயல்படும் பாதுகாப்பு படையினர்… !!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு தகுதி நீக்கப்பட்டதில் இருந்தே, பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெறும் மோதல் சம்பவம் அதிகரித்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக, பயங்கரவாத அமைப்பில் புதிதாக சேர்ந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் இன்று கைது செய்துள்ளனர்.

சோபியான் மாவட்டத்தில் உள்ள மால்தேரா பகுதியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதியின் விவரத்தை காவல்துறை இன்னும் வெளியிடாத நிலையில், விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகிறது. முன்னதாக, பாரமுல்லா மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் படைத்தளபதி ஷாஜத் ஹைதர் தலைமையிலான குழு, மத்திய ரிசர்வ் காவல்படையினர் மீது நேற்று தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி தரும் வகையில், பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Categories

Tech |