Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஜமாபந்தி நிகழ்ச்சியில்… 25 மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கிய கலெக்டர் ….!!!!

கலெக்டர் அரவிந்த் ஜமாபந்தி நிகழ்ச்சியில் 25 மனுக்களுக்கு உடனடி தீர்வு கொடுத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் இருக்கின்ற கல்குளம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 4 தினங்களாக ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில் கல்குளம் தாசில்தார் ரமேஷ், வட்ட வழங்கல் அலுவலர் மரிய ஸ்டெல்லா, தலைமையிடத்து துணை தாசில்தார் முருகன், மண்டல துணை தாசில்தார் மாரியப்பன், தலைமை நிலஅளவர் கிரிதர் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதனையடுத்து கலெக்டர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அதில் மொத்தம் 828 மனுக்களை பெற்றுக்கொண்டதில் 25 மனுக்களுக்கு உடனே தீர்வு காணப்பட்டுள்ளது. அதில் 15 பேருக்கு முதியோர் உதவித் தொகையும், 10 பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை மூலம் விசாரணை மேற்கொண்டு விரைவில் தீர்வு காண உள்ளது.

Categories

Tech |