ஜப்பானின் குவாட்மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியாவின் பிரதமரான மோடி, அமெரிக்க நாட்டின் அதிபர், ஆஸ்திரேலிய பிரதமர், முன்னாள் பிரதமர்களுக்கு வழங்கிய பரிசுகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுக்கு, மோடி சான்ஜி எனப்படும் காகித்தை வெட்டி உருவாக்கப்படும் கலை வடிவத்தை வழங்கினார். இது உத்தரபிரதேசத்தின் மதுராவில் தோன்றிய கலைவடிவம் ஆகும்.
அதேபோன்று மத்தியபிரதேச பழங்குடியின மக்களால் உருவாக்கப்பட்ட கோண்டு ஓவியம் ஒன்றை, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீசுக்கு மோடி பரிசாக வழங்கினார். ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவுக்கு, குஜராத்தின் கட்ச்பகுதி ரோகன் ஓவியம் பொறிக்கப்பட்ட கையால் செதுக்கிய ஓர் அழகான மரப்பெட்டியை மோடி அளித்தார். ஜப்பான் முன்னாள் பிரதமர்களான யோஷிடே சுகா, யோஷிரோ மோரி, ஷின்சோ அபே போன்றோருக்கு தமிழ்நாட்டின் பத்தமடை பாய்களை மோடி பரிசாக வழங்கினார்.