Categories
உலக செய்திகள்

ஜப்பானில் உயிருடன் பரிமாறப்பட்ட மீன்….!! அதிர்ந்துபோன வாடிக்கையாளர்…!! வைரலாகும் வீடியோ…!!!

ஜப்பானில் ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவில் மீன் ஒன்று உயிருடன் இருந்த சம்பவம் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானில் உள்ள யானகவா என்ற இடத்தில் அமைந்துள்ள ஓட்டலுக்கு சாப்பிட வந்த வாடிக்கையாளர் மீன் ஆர்டர் செய்துள்ளார். அந்த மீன் உணவை வாடிக்கையாளர் சாப்பிட எடுத்த போது அந்த மீன் உயிரோடு இருந்துள்ளது.

https://www.instagram.com/tv/Ca2ecRGKQ9E/?utm_medium

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் ஹோட்டல் நிர்வாகத்திடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளார். அந்த வீடியோவில் ஜப்பானியர்கள் சாப்பிட பயன்படுத்தப்படும் சாப் ஸ்டிக்கை அந்த மீனுக்கு அருகில் கொண்டு செல்லும்போது அந்த மீன் தன்னுடைய வாயை திறந்து சாப் ஸ்டிக்கை கடிக்க முயல்கிறது.

Categories

Tech |