பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, பாஜக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழக பொறுப்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழகம் முழுவதும் பாஜகவினரிடம் நேர்காணல் நடத்தப்பட்டு அதன் பிறகு வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள். மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேசி முடிவு எடுப்பார். எது எப்படி ஆனாலும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.