இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. ஆனாலும் ஒமைக்ரான் வைரஸ் அச்சம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் ஹரியானா மாநிலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஜனவரி 12-ஆம் தேதி வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக மட்டுமே பாடம் நடத்தப்படும் என்று ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இது போன்ற அறிவிப்புகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.