Categories
தேசிய செய்திகள்

ஜன.,1-ல் ரூ. 2,000 பணம்….. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்று அழைக்கப்படும் விவசாயிகளின் நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது. பயிரிடக்கூடிய நிலங்களை தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகள் இந்த நிதி உதவி பெற விண்ணப்பிக்க முடியும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

pm-kisan திட்டத்தின் கீழ் இதுவரை ஒன்பது தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் 10-வது தவணை நிதி உதவி ரூபாய் 2000 ஜனவரி 1 புத்தாண்டு அன்று வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 1 மதியம்  12.30 மணிக்கு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் நிதியுதவியை விடுவிக்கிறார். இந்த நிதியை பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |