Categories
தேசிய செய்திகள்

ஜனாதிபதி நிகழ்ச்சி பணியின் போது….. திடீரென பலியான உயர் அதிகாரி….. என்ன நடந்தது?….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு இன்று பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த புலனாய்வு பிரிவு அதிகாரி மேடையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதப்பூரில் உள்ள ஷில்பகலா வேதிகாவில்தான் துணை குடியரசுத் தலைவர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பணிகளை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உதவி இயக்குனர் குமார் அம்ரேஷ் ஆடிட்டோரியத்தில் ஓரத்தில் இருந்தபடி தனது செல்போனில் மேடையை படம்பிடித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் கால் தவறி அதில் அவர் மேடையில் இருந்து சுமார் 12 அடி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதை கண்ட அங்கிருந்த அதிகாரிகள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேடையில் இருந்து கால் தவறி உயிரிழந்த புலனாய்வு பிரிவு அதிகாரி குமார் அம்ரேஷ்ற்க்கு அதிகாரிகள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவருக்கு ஒரு மனைவி, ஒரு மகள் மற்றும் மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |