மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் அமைச்சரவின் மந்திரியாக இருப்பவர் அகில கிரி. இவர் பாஜகவை சேர்ந்த சுவேந்த அதிகாரியின் நந்திகிராமம் தொகுதியில் கூடி இருந்த பொதுமக்களின் முன்னாள் பேசியது, சுவேந்த அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாய் இருக்கிறார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களின் தோற்றத்தில் அடிப்படையாக அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றம் அளிக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சை கேட்ட மக்கள் ஆரவாரம் செய்தனர். சிரிப்பொலியும் எழுந்தது.
அதனை தொடர்ந்து அவரின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மம்தா பானர்ஜி எப்போது பழங்குடியினருக்கு எதிரானவர். ஜனாதிபதியாக வர திரௌபதி முர்முக்கு அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை. தற்போது இப்படி நடந்து கொள்கிறனர், வெட்கக்கேடானது என்று அமித் மாளவியா தெரிவித்துள்ளார். அதனைப் போல மேற்கு வங்காள பாஜக வெளியிட்ட செய்தியில், ஜனாதிபதி திரௌபதி முர்மு பழங்குடி சமூகத்தில் இருந்து வந்தவர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மந்திரியான அகில் கிரி மகளிர் நலத்துறையை சேர்ந்த மற்றொரு மந்திரியான சஷி பாஞ்சா இருக்கும்போது ஆட்சேபனைக்குரிய வகையில் பேசி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த காலங்களில் ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ஆதிர்ன ரஞ்சன் சவுத்ரி, காங்கிரசின் உதித் ராஜ் ஆகியோர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்கள். அதன் பிறகு அவர்கள் இருவரும் மனிப்பு கேட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | "We don't judge anyone by their appearance, we respect the office of the President (of India). But how does our President look?," says West Bengal Minister and TMC leader Akhil Giri in Nandigram (11.11.2022) pic.twitter.com/UcGKbGqc7p
— ANI (@ANI) November 12, 2022