சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகிறது.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுவது வழக்கம். அதேபோல் பீகார் மாநிலத்தில் சாதி வாரியாக கணக்கெடுக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் அப்போது முதல் மந்திரியாக இருந்த நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவர் தற்போது பாஜகவில் இருந்து விலகி தானு கட்சி ஆதரவுடன் மீண்டும் முதல் மந்திரி ஆனார்.
இந்நிலையில் பீகாரில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த மாதம் 7-ஆம் தேதி தொடங்குகிறது. இது 500 கோடி ரூபாய் செலவில் 2 கட்டங்களாக நடைபெறும். மேலும் இந்த பணியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 3 லட்சம் பேர் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.