தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் நடப்பு ஆண்டில் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம், தேர்வு கட்டணம் செலுத்தவும் ஜனவரி 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் எக்காரணத்தைக் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது என்றும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணியை ஜனவரி 31ம் தேதிக்குள் முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.