இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கி மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையில் ஒடிசா மாநில அரசு ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்பு தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஓடிசா மாநில அரசு டிசம்பர் 1 ஆம் தேதியன்று 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 3 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதுகுறித்து கல்வி அமைச்சர் சமீர் டாஷ் கூறியது, ஒடிசா மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 3 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும். ஆனால் மாணவர்களின் நேரடி வருகை கட்டாயமாக்கப்படவில்லை. அவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் பள்ளிகள் நடைபெறும் நேரங்களில் வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.