Categories
மாநில செய்திகள்

ஜனவரி 13ஆம் தேதி அரசு விரைவு பேருந்துகளில் பயணம்…. இன்று முதல் முன்பதிவு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்படும். இந்த விடுமுறை தினத்தை பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுவர். இதனால் அனைவரும் ஒரே நாளில் பயணம் செய்யும்போது பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு போக்குவரத்து துறை விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை பயணிகளுக்கு வழங்கியுள்ளது.

அதன்படி 2023 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக ஜனவரி 13ஆம் தேதி அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணம் செய்ய விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் TNSTC என்ற செயலியில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |