தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜனவரி 10ஆம் தேதி முதல் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய முடியும். மாஸ்க் அணியாமல் ரயில் நிலையத்தில் நடமாடினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. மேலும் UTS செயலி வழியாக ஜனவரி 31ஆம் தேதி வரை புறநகர் ரயிலில் பயணம் செய்வோர் முன்பதிவு செய்ய முடியாது என்றும் அறிவித்துள்ளது.
Categories
ஜனவரி 10 முதல் புதிய கடும் கட்டுப்பாடுகள்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!
