தமிழகத்தில் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் முழுமையான தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.