அமைதியான முறையில் ஜனநாயக மாற்றத்திற்கு சமரசம் செய்ய வேண்டும் என இலங்கை தலைவர்களுக்கு ஐநா பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இலங்கை நிலவரம் பற்றி ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இலங்கை நிலவரத்தை தொடர்ந்து கவனித்து வருகின்றேன். கலவரத்திற்கான காரணம் மற்றும் போராட்டக்காரர்களின் குறைகளை சீர் செய்வது மிகவும் முக்கியமாகும். மேலும் அமைதியான முறையில் ஜனநாயகம் மாற்றத்திற்கு சமரசம் செய்யுமாறு அனைத்து கட்சி தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.