Categories
சினிமா தமிழ் சினிமா

ஜனங்களின் கலைஞருக்கு என் புகழஞ்சலி… கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ…!!

ஜனங்களின் கலைஞருக்கு என் புகழஞ்சலி என்று கூறி உருக்கமான வீடியோ ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் தொடங்கியதுசிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார்.

அவரின் உடல் இல்லத்தில்  அனைவரும் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்தது. இவரின் உடலுக்கு பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதை எடுத்து இவரின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. நேரில் வந்து அஞ்சலி செலுத்தாதவர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மரங்களை விதைத்து மனங்களில் முளைத்த ஜனங்களின் கலைஞருக்கு என் புகழஞ்சலி, இதற்குப் பிறகு அவர் விட்டுச்சென்ற விதைகள் மரமாக வளரும் என்று இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் நடித்துள்ளார். இருவரும் இணைந்து நடித்தது இதுதான் முதல் முறை.

Categories

Tech |