Categories
மாநில செய்திகள்

ச்சீ… “பானிபூரிக்கு தயார் செய்த கிழங்கில் புழு”… வடமாநிலத்தவரை கட்டிவைத்து உதைத்த இளைஞர்கள்….!!!

சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரைவாக்கத்தில் பானி பூரி தயார் செய்து கிழங்கில் புழு இருந்ததால் வடமாநிலத்தவரை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பட்டரைவாக்கம் பகுதி வழியாக ஒரு தள்ளு வண்டியில் வடமாநிலத்தவர் ஒருவர் பானி பூரியை விற்று சென்றார். அப்போது அவ்வழியாக வந்த இளைஞர்கள் அவரிடம் பானிபூரி வாங்கி சாப்பிட்டனர். இதில் ஒரு இளைஞர் பசியின் காரணமாக வட மாநிலத்தவர் பானி பூரியை தருவதற்கு முன்பாக உருளைக்கிழங்கை எடுத்து பானிபூரியில் வைத்து சாப்பிட தொடங்கினார். அப்போது உருளைக்கிழங்கில் ஏதோ துர்நாற்றம் வீசியுள்ளது. பிறகு அந்த இளைஞர் அதனை சோதனை செய்து பார்த்தபோது அந்த உருளைக்கிழங்கில் புழு இருந்தது தெரியவந்தது.

மேலும் அந்த உருளைக்கிழங்கை வேக வைத்து பல நாட்கள் ஆனதும், கெட்டுப்போகாமல் இருப்பதற்காக உருளைக்கிழங்கை சூடு செய்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பானிபூரி விற்பனை செய்த வடமாநிலத்தவரை கட்டி வைத்து அடித்து உதைத்தனர். பின்னர் அவரை அழைத்துக்கொண்டு பானி பூரி தயார் செய்யும் வீட்டிற்கு சென்று வட மாநிலத்தவரின் முதலாளி மற்றும் இருவரை பிடித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |