Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ச்சீ…! அண்ணன் செய்யுற காரியமா இது…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

திருச்சி மாவட்டம் கல்லுக்குழி பகுதியை சேர்ந்த தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் படித்து வரும் ஒன்பதாம் வகுப்பு மாணவி கடந்த 14ம் தேதி வீட்டை விட்டு திடீரென மாயமானார். உடனே பெற்றோர் போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்தனர். இந்த விசாரணையில் ஒன்பதாம் வகுப்பு மாணவியை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் அழைத்துச் சென்றது தெரியவந்தது. மகேந்திரன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள டீக்கடையில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து மணப்பாறை பகுதியில் பள்ளி மாணவியுடன் தங்கியிருந்த மகேந்திரனை காவல்துறையினர் கைது செய்தனர்.

மாணவியை மகேந்திரன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மேலும் மகேந்திரன் பள்ளி மாணவியின் உறவினர் எனவும் மாணவிக்கு மகேந்திரன் சகோதரன் முறை வேண்டும் எனவும் காவல்துறையினர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |