அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் freer gallery of art அருங்காட்சியகத்தில் சோழ வம்சத்தை சேர்ந்த ஆயிரம் வருடத்திற்கும் மேல் பழமையான செம்பியன் மகாதேவி உலோக சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்து இருக்கின்றனர். இது பற்றி விளக்கம் அளித்த சிலை தடுப்பு பிரிவு போலீஸ் நாகப்பட்டினத்தில் உள்ள செம்பியன் மகாதேவி கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் உள்ள சிலை போலியானது. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழப் பேரரசர் கண்ட ராத்தரின் பட்டத்தரசி செம்பியன் மகாதேவி சிலை இந்தியாவில் இருந்து திருடப்பட்டிருக்கின்றது.
மேலும் சோழர் காலத்து ஐம்பொன் சிலை 1959 ஆம் வருடத்திற்கு பிறகு திருடப்படவில்லை 1929 ஆம் ஆண்டுக்கு முன் சிலை திருடப்பட்டு இருக்கின்றது. 1929 ஆம் வருடம் ஹாகோப் கெவோர்கியன் என்பவரால் திருடப்பட்டு வாஷிங்டன் டிசியில் உள்ள ஃபிரீயர் அருங்காட்சியகத்திற்கு செம்பியன் மகாதேவி சிலை விற்கப்பட்டிருக்கிறது. கடத்தலில் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இல்லை. ஏனென்றால் 1929 ஆம் வருடத்திற்கு முன்பு இந்து அறநிலையத்துறை இல்லை சுதந்திரத்திற்கு முன் மாயமான செம்பியன் மகாதேவி சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அதை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.