சோர்வடைந்த உங்கள் முகம் பளிச்சென்று மாற செலவே இல்லாத தண்ணீர் சிகிச்சைபற்றி அறிந்து கொள்ளுங்கள்.
நாம் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். நிறம் குறைவாக இருந்தாலும் முகத்தில் பருக்கள், எண்ணெய்ப்பசை, அழுக்குகள், கரும்புள்ளிகள் இல்லாமல் பளிச்சென்று இருந்தாலே நமக்குள் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். இதற்காக நாம் தினமும் நிறைய அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி நிறைய பணத்தை செலவழித்து கொண்டுதான் இருக்கின்றோம்.
ஆனால் செலவே இல்லாமல் வீட்டிலேயே இந்த முறையை பின்பற்றி பாருங்கள் உங்கள் சோர்வடைந்த முகம் பிரகாசமாக தோன்றும். எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல் சருமத்தை அழகாக்கவும் முகத்தை பளிச்சென்று மாற்றும் சக்தி சூடான வெந்நீருக்கு உண்டு. அதாவது சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது.
ஏனென்றால் ஆவி பிடிப்பதால் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து அதில் உள்ள அழுக்குகள், கிருமிகள் விரைவில் வெளியேறிவிடும். மேலும் இதற்கு எந்த ஒரு செலவும் ஆகாது. இதனை எந்த நேரத்திலும் வீட்டில் சூடான நீரை வைத்து செய்யலாம்.
ஆவி பிடிப்பது மற்றும் இதனால் ஏற்படும் நன்மைகள்:
ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீரை எடுத்துக் கொண்டு முகத்தில் அதன் ஆவி படும்படி அமர்ந்துகொண்டு, ஒரு போர்வையால் ஆவி வெளியே செல்லாதபடி போர்த்திக்கொள்ள வேண்டும். இதை 10 நிமிடம் செய்ய வேண்டும்.
முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு இந்த முறை மிகவும் ஒரு சிறந்த முறையாகும். இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ அப்போது ஆவி பிடித்து முடித்ததும் முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.
மேலும் அடிக்கடி ஆவி பிடிப்பதால் முகத்தின் அழகை கெடுக்கும் கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வரவே வராது. மேலும் முக்கியமாக முதுமைத் தோற்றத்தை தடுக்கும். எவ்வாறென்றால் சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் முகம் பளிச்சென்று இல்லாமல், முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது.
இப்படி ஆவி பிடிக்கும் போது அந்த அழுக்குகள் நீங்கி முகம் பளிச்சென்று மாறி இளமை தோற்றத்தை தரும். ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் எந்த ஊரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும்.
அதனால் சருமம் மிகவும் அழகாக பொலிவோடு இருக்கும். பொதுவாக கெமிக்கல் நிறைந்த அழகு சாதனப் பொருட்களை கொண்டு அழகு படுத்தும் பொழுது சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தி, அது மற்றொரு பிரச்சினையை ஏற்படுத்திவிடும். ஆனால் இந்த ஆவி பிடித்தல் முறையால் எந்த ஒரு பக்கவிளைவும் கிடையாது .
ஆகவே வாரத்தில் இரண்டு முறை செய்தாலே போதும். சோர்வடைந்த உங்கள் முகம் பளிச்சென்று மாறிவிடும். மேலும் இந்த சூடான நீரில் சிறிது வேப்பிலையை கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம். வேப்பிலை பொதுவாக கிருமி நாசினி என்பதால் அதன் பலன் இரட்டிப்பாகும்.