Categories
தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை விஷயத்தில் தயவுசெய்து அரசியல் செய்யாதீர்கள் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அசிங்கமான, நாகரிகமற்ற அரசியல் செய்கிறார் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாள் கலவரத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் காவல் துறையினர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் டெல்லி வன்முறை குறித்து பேசிய சோனியா காந்தி, டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் அரசியல் சூழ்ச்சி. இந்த வன்முறை சம்பவம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று. தேர்தலுக்கு பிறகு வேண்டுமென்றே இந்த சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்த நிலையில் சோனியா காந்திக்குப் பதிலடி தரும் வகையில் பேசிய பாஜக மூத்த தலைவரும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான பிரகாஷ் ஜவடேஹர், டெல்லி கலவரத்தைப் பற்றிப் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கலவரத்துக்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது நகைப்புக்குரியது என கூறியுள்ளார்.

காங்கிரஸ் கைகளில்தான் சீக்கியர்கள் ரத்தக்கறை படிந்துள்ளது. சீக்கியர்களை கொன்று குவித்தவர்கள்தான் வன்முறையை நிறுத்துவது குறித்தும், வெற்றி குறித்தும் பேசுகிறார்கள். அமித் ஷா எங்கே என்று காங்கிரஸ் கேட்கிறது. அவர் அனைத்துக்கூட்டத்தில் நேற்று ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் தான் பங்கேற்றார். டெல்லி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அமித் ஷா போலீஸாருடன் இணைந்து தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகிறார். கலவரம் குறித்து விசாரணை நடக்கும்போது, உண்மை வெளிவரும். இந்த விஷயத்தில் தயவுசெய்து அரசியல் செய்யாதீர்கள் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |