Categories
தேசிய செய்திகள்

சோனியா காந்திக்கு மருத்துவ பரிசோதனை…. வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல்….!!!

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் வெளிநாட்டிற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கட்சியை வலுப்படுத்தவும், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும் நாடு முழுவதும் யாத்திரை செல்வதற்கு திட்டமிட்டுள்ளார். இதன் முதற்கட்ட துவக்கமாக செப்டம்பர் 7-ம் தேதி ராகுல் காந்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை பாதயாத்திரை செல்வார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பாதயாத்திரை தொடங்குவதற்கு முன்பாக செப்டம்பர் 4-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ஒரு கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்ள இருக்கிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாக கூறியுள்ளார். இவருடன் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் உடன் செல்கின்றனர். ஆனால் அவர்கள் எந்த நாட்டிற்கு எந்த தேதியில் செல்கின்றனர் என்ற விவரத்தை ஜெய்ராம் ரமேஷ் சொல்லவில்லை. மேலும் சோனியா காந்தி டெல்லிக்கு திரும்பும் முன்பு தன்னுடைய தாயாரை சந்திப்பார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |