Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சோதனை வேட்டையில் ஈடுபட்ட போலீசார்….. “கர்நாடக எல்லையில் கஞ்சா கடத்திய 2 பேர்”….!!!!!!

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தார்கள்.

தமிழகத்தில் அடிக்கடி கஞ்சா கடத்தல், போதைப்பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடந்து வருகின்றது. இதனால் போலீஸ்சார் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீஸ்சார் கர்நாடக எல்லைப் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் சந்தேகப்படும்படி இருந்தார்கள்.

இதனால் போலீஸ்சார் அவர்களிடம் சோதனை மேற்கொண்டதில் இரண்டு பேரிடமும் 850 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனால் போலீசார் இரண்டு பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மாதவன், சின்னப்பி என்பதும் கர்நாடக மாநிலம் ராமாபுரத்தில் இருந்து கஞ்சாவை விற்பனைக்காக மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனால் போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தார்கள்.

Categories

Tech |