Categories
தேனி மாவட்ட செய்திகள்

சோதனை சாவடியில் நடந்த தகராறு…. வனக்காவலர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

வனக்காவலரை தாக்கிய கூலித்தொழிலாளர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்திலுள்ள வருசநாடு, கோரையூத்து, காமன்கல்லூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 27ஆம் தேதி அரசு பேருந்தில் அரசடிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது  இந்நிலையில் மஞ்சனூத்து சோதனை சாவடியில் வைத்து பேருந்தை நிறுத்து வனத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது பணியில் இருத்த மேகமலை வனக்காவலர் செல்லதுரை வனத்துறையினர் அனுமதி இல்லாமல் வனப்பகுதிக்குள் வேலைக்கு செல்லக்கூடாது என கூறியுள்ளார். இதனால் கூலிதொழிலாளர்களுக்கும், செல்லத்துரைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது கோரையூத்தை சேர்ந்த பரமன் மற்றும் சிலர் வனக்காவலர் செல்லதுரையை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் செல்லத்துரை தாக்கியதில் 3 பெண்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து வன பாதுகாவலர் ரவிக்குமார் மற்றும் வனசரகர் சதீஷ் கண்ணன் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆண்டிப்பட்டி துணை சூப்பிரண்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதன் அடிப்படையில் வனக்காவலர் செல்லதுரையை தாக்கிய நபர்கள் மீது வழக்குபதிவு செய்த நிலையில் 3 பெண்களை தாக்கிய செல்லத்துரை மீதும் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |