சரக்கு வேனிலிருந்த ரூபாய் 9 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தனர். இதனடிப்படையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்திலுள்ள சுங்கச்சாவடியில் காவல்துறையினர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை மறித்து விசாரணை செய்ததில் ஓட்டுனர் மாடசாமி முன்னுக்கு பின்னாக பதில் கூறியுள்ளார்.
இதனால் காவல்துறையினர் சந்தேகமடைந்து வேனை சோதனை செய்ததில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட பொருளான ரூபாய் 9 லட்சம் மதிப்புள்ள கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் கஞ்சா சேலத்திலிருந்து விருதுநகருக்கு கடத்தப்படுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாடசாமியை கைது செய்த காவல்துறையினர்கள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.