Categories
சினிமா தமிழ் சினிமா

சோதனைகளை கடக்கும் சமந்தா…. இதை பாலோ செய்கிறாராம்…. அவரே போட்ட டுவீட்…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டார். இந்த செய்தியை இணையவாசிகள் அனைவரும் பகிர்ந்து விரைந்து குணமாக வேண்டுமென தேசிய அளவில் #SamanthaRuthPrabhu எனும் ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஜூனியர் என்டிஆர், ரகுல் ப்ரீத் சிங், ராஷி கண்ணா, வம்சி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் சமூகவலைதள பக்கங்களில் குணமடைய வாழ்த்து தெரிவிக்கும் நிலையில் நடிகை சமந்தா ‘யசோதா’ பட புரமோஷனுக்காக தயாராகியுள்ள புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதில் மிகவும் சோர்வாக காணப்படும் அவர், ஒரு நாள் எவ்வளவு மோசமாக இருந்தாலும், அந்த நாளில் நாம் நம்முடைய வேலையை பார்க்க வேண்டும் என்று என்னுடைய நண்பர் கூறுவார். அதை நான் இப்போது பாலோ செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |