தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கலக்கியுள்ளார். சிறுவயதில் இருந்து நடித்து வரும் மீனா குழந்தை நட்சத்திரம், நாயகி, இப்போது அண்ணி, அம்மா போன்ற வேடங்களில் நடித்து வருகிறார்கள். கடைசியாக இவர் மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில் அவரது சொந்த வாழ்க்கையில் ஒரு சோகம் ஏற்பட்டது. அவரது கணவர் வித்தியாசாகர் உடல் நல குறைவால் உயிர் இழந்தார்.
https://www.instagram.com/reel/CjArBlFpJq4/?utm_source=ig_embed&utm_campaign=loading
அவருக்காக அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர். இதனையடுத்து கணவர் இழப்பை தாங்க முடியாத மீனா இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளி வருகிறார். அவ்வப்போது தனது கணவர் குறித்த பதிவுகள் போட்டு வருகிறார். இந்நிலையில் தனது நெருங்கிய தோழியுடன் வெளிநாடு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் அதிக லைக்குகளை குவித்து வருகின்றனர்.