புஞ்சைபுளியம்பட்டி குளத்தில் சாயக்கழிவு நீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் போரட்டத்தில் ஈடுபட்டதால் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வாகனப் போக்குவரத்து ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகேயுள்ள நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட 75 ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தில் ஓடை வழியாக சாயக்கழிவு நீர்கள் கலக்கின்றன. இதனை அருந்தும் கால்நடைகள் நோய் வாய்க்கு உட்பட்டுள்ளன. இந்நிலையில் சாயக்கழிவு நீர் தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் எந்த பதிலும் அளிக்காததால் பொதுமக்கள் சத்தியமங்கலம் – கோவை நெடுஞ்சாலையில் நேற்றுமுன்தினம் காலை 8 மணி அளவில் வந்து குளத்தில் சாயக்கழிவு நீர் கலப்பதைதடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை அறிந்த போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து சமாதனம் கூறினார்கள்.
அவர்கள் அதைக் கேட்கவில்லை. அதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ,பி.எல் சுந்தரம் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி மைதிலி, பாவேசு விரைந்து வந்து சமாதானம் கூறினார்கள். அதிகாரிகள் பொதுமக்களிடம் தற்காலிகமாக மண்களை கொட்டி கழிவுநீர் வருவதை தடுப்பதாகவும் அதன்பின் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கழிவுநீர் கலக்காமல் பார்த்துக்கொள்வதாக கூறினார்கள். அதை தொடர்ந்து பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர். 11 மணி அளவில் போராட்டம் முடிவடைந்து இதனால் அப்பகுதியில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக வாகனப்போக்குவரத்து ஏற்பட்டது.