ஜாமினில் சிறையிலிருந்து வெளியே வந்த பிரபல ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்ததால் கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மாவட்டம் கொளத்தூர் ராஜீவ் காந்தி நகர் 2-வது தெருவில் வசித்து வருபவர் 27 வயதான பழனி . பிரபல ரவுடியான இவர் மீது கொளத்தூர் ராஜமங்கலம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி என பல வழக்குகள் இருந்துள்ளன . மேலும் ஒரு கொலை வழக்கில் சிறைக்கு சென்று சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இதனிடையே கடந்த 14ஆம் தேதி இரவு கொளத்தூர், மக்காராம் தோட்டம், எத்திராஜ் தெரு அருகே பழனி நடந்து சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இரண்டு பேர் ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர் . இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராஜமங்கலம் போலீசார் பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் .
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவரின் நண்பர்களான விக்கி என்ற விக்னேஷ், ஆதி என்ற ஆதிகேசவன் ஆகிய இருவரும்தான் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து கொலை செய்யப்பட்ட பழனி ஆதிகேசவனின் நண்பர் ஒருவரது மனைவியுடன் கள்ள தொடர்பு வைத்துள்ளார். அந்த கள்ளத்தொடர்பை விட்டுவிடும்படி பலமுறை எச்சரித்த பின்னும் பழனி சொன்னதை கேட்காததால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பழனியின் உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி ராஜமங்கலம் போலீஸ் நிலையத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்து கலைந்து போகும்படி செஇதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.