இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் எஸ் ஜே சூர்யா. ஆரம்ப காலகட்டத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக தனது பயணத்தை தொடங்கிய இவர் தற்போது தமிழ் சினிமாவில் மிகப் பெரிய இடத்தை பிடித்துள்ளார். இவர் விஜய்யை வைத்து இயக்கிய குஷி படம் மாபெரும் வெற்றி கண்டது. இதனைத்தொடர்ந்து அஜீத்தை வைத்து வாலி என்ற படத்தை இயக்கினார் அந்த படமும் பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்குப் பிறகு நியூ என்ற படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்திருந்தார்.
பின்னர் சில காலங்களுக்கு படம் இயக்குவதை நிறுத்திவிட்டு முழு நேரமாக நடிப்பில் தன் ஆர்வத்தை காட்டி வந்தார். இவர் நடித்து வெளியான இறைவி திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது. அந்த படத்தில் அருள் என்ற கதாபாத்திரமாகவே மாறி நடித்திருந்தார். இந்நிலையில் இவர் படம் இயக்குவதை ஏன் ஒத்தி வைத்துள்ளார் என்று கேள்வி பலர் மனதிலும் முன்வைக்கப்பட்டுள்ளது.
நடிகராக ஆகவேண்டும் என எண்ணி தான் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்ததாகவும் சூழ்நிலை காரணமாக இயக்குனராக மாறியதாகவும் அவர் ஒரு பேட்டியின்போது குறிப்பிட்டு இருந்தார். எனவே தற்போது அவரே ஒரு படத்தை தயாரித்து அதில் நடிக்கப்போவதாக கூறியுள்ளார். இயக்குனராகவும் நடிகராகவும் வெற்றி கண்ட நடிகர் எஸ் ஜே சூர்யாவின் சினிமா உலகம் பாராட்டி வருகிறது.