தமிழகத்தில் சாலை அமைப்பு பணிகளின்போது சிதிலமடைந்த சாலைகளில் மீது புதிய சாலைகளை அமைத்ததால் அவை விரைவில் பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறி விடுகின்றன என்பதால் ஏற்கனவே பழுதடைந்த சாலையை முழுவதுமாக சுரண்டி எடுத்துவிட்டு பின்னர் அதே அளவுக்கு புதிய சாலையை அமைக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதோடு இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினும் அறிவுறுத்தி இருந்தார். ஆனால் இறையன்புவின் இந்த கடிதத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் அவர்கள் செய்வதை சரியாக செய்து வந்துள்ளனர் நெடுஞ்சாலை துறையினர்.
இதனால் நேரில் சென்று ஆய்வு செய்த இறையன்பு பழைய சாலைகளின் மீது புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். ஏனெனில் ஒரு சில பகுதிகளில் மட்டும் தலைமைச் செயலாளரின் உத்தரவை ஏற்று பழைய சாலைகளை பெயர்த்து எடுத்து விட்டு புதிய சாலைகள் அமைத்து உள்ளனர். ஆனால் மற்ற சில பகுதிகளில் பழைய சாலைகளின் மீதே புதிய சாலையையும் அமைத்துள்ளனர். அதோடு இந்த சாலை அமைக்கும் பணியின்போது ஒரு குறிப்பிட்ட தொகையில் கோடிக்கணக்கில் லாபம் பார்ப்பதாகவும் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக நீதிமன்றமும், முதல்வரும் பலமுறை அறிவுறுத்தியும் இவர்கள் கேட்டபாடில்ல. இந்த விஷயம் முதல்வரின் கவனத்திற்கு சென்றால் என்ன ஆவது என இறையன்பு பயத்தில் உள்ளாராம்.