மிசோரம் மாநிலத்தில் அதிக குழந்தைகளைப் பெற்ற பெற்றோருக்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கப்பட்டுள்ளது.
மிசோரம் மாநிலத்தில் பூர்வீகக் குடிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்து கொண்டு வருகின்றது. அதன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் ராபர்ட் ரோமானியா ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டார். அது என்னவென்றால் அய்சால் கிழக்குத் தொகுதியில் அதிக குழந்தைகளைப் பெறும் பெற்றோருக்கு பரிசு வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.
இதன்படி துய்தியாங் பகுதியை சேர்ந்த தம்பதிகள் 15 பிள்ளைகளை பெற்றுள்ளனர். அவர்களுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கி கௌரவித்தார். அடுத்தபடியாக 13 பிள்ளைகளை பெற்ற பெண்ணிற்கு 30 ஆயிரம் ரூபாயும், 12 பிள்ளைகளை பெற்ற தலா 3 தம்பதிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசு அனைத்தையும் அம்மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் வழங்கினார்.