Categories
அரசியல்

சொந்த வீடா…. வாடகை வீடா….. எது பெஸ்ட்….? வாங்க பாத்து தெரிந்துக்கொள்ளலாம்….!!!!

சொந்த வீடா? வாடகை வீடா? இதில் எது பெஸ்ட் என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

இந்தியாவில் சொந்த வீடு என்பது மிகப் பெரிய செலவாக பார்க்கப்படுகிறது. நிலம் வாங்கி, வீடு கட்டுவது என்றால் அது பெரிய செலவை ஏற்படுத்துகிறது. பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதற்கு பல லட்சம் கோடி ரூபாய் செலவாகிறது. நகரம், போக்குவரத்து வசதி என பல காரணிகளின் அடிப்படையில் வீடு வாங்குவதற்கான செலவு அதிகரித்து வருகிறது. எனவே ஏராளமானோர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். வாடகை வீடுகள் பெரிதும் உதவுகின்றது. இதைத்தாண்டி பலருக்கு சொந்த வீடு வாங்கலாமா அல்லது வாடகை வீட்டிலேயே தொடர்ந்து வாசிக்கலாமா? என்ற பெரும் குழப்பம் ஏற்படுகின்றது. சொந்த வீடு வாடகை வீடு இரண்டுமே சாதக பாதகங்கள் உள்ளன. அவற்றை பற்றி பார்ப்போம்.

சொந்த வீடு:

சொந்த வீடு வாங்கினால் அதற்கு நீங்கள் உரிமைதாரர் என்ற பெருமையும், பாதுகாப்பும் கிடைக்கும். வாடகை வீட்டில் தொடர்ந்து வாடகை செலுத்தி வசித்தால் அது சொந்த வீடு ஆகாது. சுருக்கமாக சொன்னால் நமக்கு என தனி சொத்து கிடைக்காது. ஆனால் வீட்டிற்கு இஎம்ஐ செலவு ஏற்பட்டாலும் உங்களுக்கு தனி சொத்து கிடைக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் வீடு மாற்றும் போது எல்லாவற்றையும் எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கு நிறைய பணம் செலவாகும். ஆனால் இந்த பிரச்சனைசொந்த வீட்டுக்காரர்களுக்கு  இருக்காது. மேலும் சொந்த வீடு என்பது ஒரு ரியல் எஸ்டேட் சொத்து. நீண்ட கால அடிப்படையில் வீட்டின் மதிப்பு உயரும். எனவே இதை ஒரு நல்ல முதலீடாக பார்க்கலாம்.

வாடகை வீடு:

EMI கடன் சுமை இருக்காது, செலவும் கிடையாது. பெரு நகரங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட வீட்டை சில ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுக்க முடியும். ஆனால் அதே வீட்டை வாங்குவதற்கு அதிகம் செலவாகும். நகரங்களில் வீடுகளின் விலை உச்சத்தில் உள்ளதால் வீட்டை வாடகைக்கு வாங்குவதையே பலரும் சிறந்ததாக நினைக்கின்றனர். ஆனால் அதே இடத்தில் சொந்த வீடு வாங்குவதற்கு தாறுமாறாக செலவாகும் என்பதை உண்மை.

Categories

Tech |