பிரபல நாட்டில் மைதானத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 34 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள மலாங் மாகாணத்தில் அமைந்துள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பல அணிகள் கலந்து கொண்டனர். ஆனால் இறுதியில் அமரோ என்று அழைக்கப்படும் உள்ளூர் அணி 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்நிலையில் தன் சொந்த மண்ணில் தாங்கள் தோல்வி அடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாத அந்த அணியின் தீவிர ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது புகை குண்டுகளை வீசினர்.
அப்போது மூச்சுத்திணறி 2 போலீசார் உள்ளிட்ட 34 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.