Categories
உலக செய்திகள்

சொந்த நாட்டின் நலனுக்காக மட்டுமே இந்தியா செயல்படும்…. நடைபெற்ற ரஷ்யா-இந்தியா நட்புறவு நிகழ்ச்சி…. தகவல் அளித்த ரஷ்ய வெளியுறவு துறை மந்திரி….!!!!

ரஷ்யா-இந்தியா நல்லுறவை பாராட்டும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

ரஷியாவில் உள்ள தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் வைத்து ரஷியா-இந்தியா நல்லுறவு தொடர்பான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஷி ய வெளியுறவுத்துறை மந்திரி செர்லி லவ்ரோ பங்கேற்றார். இந்நிலையில் அவரிடம் ரஷியா-இந்தியா இடையே உள்ள உறவு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செர்லி லவ்ரோ  கூறியதாவது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் ரஷ்யா-இந்தியா நட்பிற்கு அடித்தளமாக அமைந்தது. மேலும் ரஷிய கச்சா எண்ணெய்  கொள்முதல் செய்யும் நாடுகள் மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்து வருகிறது.

அந்த பொருளாதார தடைகளில் இந்தியா இணைய விரும்பவில்லை. மேலும் ரஷிய கச்சா என்னை கொள்முதல் செய்வதிலிருந்து இந்தியாவை கட்டுப்படுத்தும் எந்த ஒரு  முயற்சிகளையும் இந்திய தலைவர்கள் மற்றும் எனது சக மந்திரியும் நிராகரித்துள்ளனர். மேலும் தங்களது சொந்த நாட்டின் நலனுக்காக  மட்டுமே செய்வோம் என இந்தியா தெரிவித்துவிட்டது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |