பிரதமரின் சாப்பாடு செலவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பிரதமர் மோடியின் சாப்பாட்டு செலவு குறித்த விவரத்தை RTI கேட்டிருந்தது. இதற்கு பிரதமர் அலுவலக செயலாளர் பினோத் பிகாரி சிங் பதில் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் வசிக்கும் இல்லம் மத்திய பொதுப்பணித்துறையால் கவனிக்கப்படுகிறது. பிரதமர் பயன்படுத்தும் வாகனங்கள் எஸ்பிஜி பொறுப்பில் உள்ளது. நாடாளுமன்றத்தில் ஒரு கேண்டின் செயல்பட்டு வருகிறது. அதில் தற்போதைய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கேண்டினில் எம்பிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகையை சபாநாயகர் ஓம் பிர்லா ரத்து செய்தார். ஆனால் கடந்த 2021-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை நாடாளுமன்ற கேண்டினில் மானியமாக 17 கோடி செலவு செய்யப்பட்டு வந்தது. அதோடு பிரதமர் மோடியின் சாப்பாட்டு செலவுக்காக அரசு பட்ஜெட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட செலவு செய்யப்படவில்லை. தன்னுடைய சாப்பாட்டு செலவுகளை பிரதமர் தான் பார்த்து கொள்கிறார் என்று கூறியுள்ளார். மேலும் தற்போது பிரதமர் மோடியின் சாப்பாட்டு செலவு கூட பேசும் பொருளாகியுள்ளது சற்று அதிர்ச்சியாகவே இருக்கிறது என்று சிலர் கூறுகின்றனர்.