Categories
அரசியல் மாநில செய்திகள்

சொந்த ஊரில் அதிர்ச்சி…! ஜாதி கட்சியான அதிமுக….  99%EPSக்கு எதிர்ப்பு… ஓபிஎஸ்க்காக அதிரும் சேலம் ..!!

சேலம் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக இளைஞரணி துணைச் செயலாளர் எடப்பாடி பி.ஏ. ராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது, சேலம் மாவட்டத்தில் சென்று ஒவ்வொரு அடிப்படை உண்மை தொண்டனையும் கேட்டால் தெரியும். சேலம் மாவட்டத்தை பொருத்தவரையில் இளங்கோவன், எடப்பாடி  பழனிசாமி  எதிர்ப்பாளர்களாக 99 சதவீதம் தொண்டர்களுடைய மனநிலை, இருவருக்கும் எதிராக இருப்பது தான் உண்மை. நிச்சயம் ஓபிஎஸ் அவர்களை ஏற்றுக் கொண்டு வருங்கால அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஓபிஎஸ் தலைமையில் மாபெரும் வெற்றி காணும்…  ஐயா அவர்கள் முதலமைச்சராக அமருவார்.

நான் அம்மாவினுடைய டீம் -ல தான் இருக்கிறேன். புரட்சித்தலைவி அம்மாவினுடைய தீவிர விசுவாசி, ஒன்றிய கவுன்சிலராக இருக்கிறேன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளராக இருக்கிறேன். நான்  இரண்டு பேருக்குமே ஆதரிக்கவில்லை. நடந்த சூழ்நிலையை கருதி, தொண்டர்களின் மனநிலையாக ஓபிஎஸ் அவர்கள் வந்தால் மட்டும் தான் இந்த இயக்கத்தை வழிநடத்த முடியும். இவர் தற்போது ஜாதி இயக்கமாக நடத்திக் கொண்டிருக்கிறார்.

எடப்பாடியின் மனநிலையில் அண்ணா திமுக கழகத்தை வீழ்த்த நினைக்கின்ற செயல்பாடாக தான் சென்று கொண்டிருக்கிறது.  97 சதவீதம் நிர்வாகிகள் அவருடன் கூட இருக்கிறார் என்றால் என்ன காரணம்… எம்.எல்.ஏ அவர் பக்கம், மாவட்ட செயலாளர் அவர் பக்கம், மாவட்ட செயலாளர் போட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அவர் பக்கம்,  இப்படி எல்லாமே இந்த நான்கு ஐந்து வருடமாக விலை பேசி வாங்குனது போல் குத்தகைக்கு எடுத்துக் கொண்டார்.

அவர்கள் யார் சொன்னால் கேட்பார்கள்.. பழனிசாமி சொல்லுறதை தான் கேட்பாங்க. தொண்டர்களை கேட்டுப் பாருங்கள்..  அவர்கள் என்ன மனநிலையில் உள்ளார்கள் ? நீங்க இளங்கோ என்ற ஒரு ஆளை வைத்து கேட்டுப்பாருங்கள்.. எல்லா  தொண்டர்கள் ஒரு பக்கம் இருப்பார்கள், பழனிச்சாமியும்,  இளங்கோவும் மறு ஒரு பக்கம் நிற்பார்கள்.

ஆனால் இன்றைக்கு வேறு வழி இல்லாமல் ஏன் நிற்கிறார்கள் ? என்றால்…  இவர்களை எதிர்த்து ஏதாவது ஒரு சூழ்நிலை அங்கு உருவாகினால்,  நிச்சயம் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அந்த மாற்றம் ஓபிஎஸ் அவர்கள் ஏற்படும் என்பது தான் உண்மை என தெரிவித்தார்.

Categories

Tech |