Categories
அரசியல் மாநில செய்திகள்

சொந்தமா ஒரு வீடு கூட இல்லைன்னு சொன்னீங்களே…. அப்ப இது என்ன…? சீமானை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்…!!!

மனைவி பெயரில் கொடைக்கானலில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்துக்கொண்டு தனக்கு ஒரு சொந்த வீடுகூட இல்லை என்று சீமான் பேசி வருவது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சீமான் அனைவரையும் கவர வேண்டும் என்பதற்காக அடிக்கடி பரபரப்பாகப் பேசி அனைவரின் கவனத்தை தன் பக்கம் திருப்பிக் கொள்வார். சில சமயங்கள் அவர் பேசுவது அவருக்கு சிக்கலாக அமைந்துவிடும். நெட்டிசன்கள் இவர் பேசும் வீடியோக்களை எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் செய்து வருவார்கள். இந்த சூழலில் சமீபத்தில் அவர் பேசிய பேச்சு மிகவும் வைரலானது. இந்த நாட்டையே அடைய துடிக்கின்ற எனக்கு, இந்த மண்ணில் ஒரு வீடுகூட கிடையாது என்று சற்று எமோஷனலாக பேசியிருப்பார். மேலும் எனக்கு சொந்த வீடு இல்லை, வாடகை வீட்டில்தான் இருக்கிறேன். அந்த வீட்டையும் காலி பண்ண சொல்கிறார்கள். நான் எங்கு போவேன். என் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு எங்கு செல்வது, நானும் என் மனைவியும் இருந்தால் பரவாயில்லை. எங்கேயாவது ஒரு குடிசையிலிருந்து விடுவோம்.

ஆனால் என் பிள்ளைகளை எங்கு கொண்டு போய் சேர்ப்பது? நானே வாடகை வீட்டில் இருக்கிறேன், அப்புறம் எப்படி வெளி நாட்டிலிருந்து பணம் வருகிறது என்று சொல்கிறீர்கள். எனக்கு கோடி கோடியாய் பணம் வருகிறது என்று சொல்கிறீர்கள் என்று பேசியிருந்தார். இந்நிலையில் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் ‘சீமான் மனைவி கயல்விழிக்கு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆறு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதை விற்று சென்னையில் சொந்தமாக வீடு வாங்கிக் கொள்ளலாமே ? என்று கேட்டு அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார். அதன்படி, 2.43 ஹெக்டேராம், அப்படியென்றால் 6 acre. 6 acre = 2, 61, 360 சதுர அடி. ஒரு சதுர அடி இன்று 115 ரூபாய் என்றால் இடத்தின் சந்தை மதிப்பு 3 கோடியே 36 லட்சம்” என்கிறார் சவுக்கு சங்கர். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் சீமானிடம் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Categories

Tech |