விஜய் தேவரகொண்டா ஹைதராபாத்தில் இருக்கும் மகபூப் நகரில் சொந்தமாக புதிய தியேட்டர் ஒன்றை கட்டியுள்ளார்..


தமிழில் கீதா கோவிந்தம் டப் செய்யப்பட்டு வெளியாகி செம ஹிட் அடிக்க விஜய் தேவாகொண்டா தமிழ் பெண்களின் மனதில் குடியேறினார்.. அதேபோல விஜய்தேவரகொண்டா நடித்த டியர் காம்ரேட் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது.. குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோவாக உயர்ந்த விஜய் தேவரகொண்டா சம்பளத்தையும் உயர்த்தியிருக்கிறார்.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா ஹைதராபாத்தில் இருக்கும் மகபூப் நகரில் சொந்தமாக புதிய தியேட்டர் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.. இந்த தியேட்டரை பல கோடிகள் செலவு செய்து அனைத்து வசதிகளுடன் மிகச் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். தன்னுடைய புதிய தியேட்டரில் முதல் படமாக நாக சைதன்யா, சாய்பல்லவி ஜோடியாக நடித்திருக்கும் ‘லவ் ஸ்டோரி’ என்ற தெலுங்கு படத்தை திரையிட போகிறார் விஜய் தேவரகொண்டா.. ரசிகர்கள் இந்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.