திருநெல்வேலியில் கொரோனா தொற்றின் பயத்தால் மூதாட்டி தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கோமதி என்பவர் வசித்து வந்தார். இவரது உறவினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த அவர் தனக்கும் கொரோனா வந்துவிடுமோ என்ற பயத்தில் இருந்தார். இந்த நிலையில் அவர் வீட்டில் யாருமில்லாத சூழ்நிலை பயன்படுத்திக்கொண்டு உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார்.
இதில் அவர் படுகாயமடைந்ததால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.