Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சொத்தை பிடுங்கி விட்டு… “பெற்றோரை அடித்து விரட்டிய மகன்கள்”… தெருத் தெருவாக அலையும் அவலம்… கண்கலங்க வைக்கும் சம்பவம்..!!

சொத்தை எழுதி வாங்கிவிட்டு வயதான பெற்றோரை அடித்துத் துரத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஓமலூரை சேர்ந்தவர்கள் முனியன்-ரஞ்சிதம் தம்பதியினர். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். நால்வருக்கும் திருமணம் முடிந்த நிலையில் தங்களுக்கு சொந்தமான 70 சென்ட் இடத்தை பிள்ளைகள் பெயரில் எழுதி வைத்துவிட்டு சிறிய வீடு ஒன்றில் தங்கள் வாழ்க்கையை கழித்து வந்தனர். வயதான தம்பதி தங்களுக்கென்று எந்த ஒரு பிடிமானமும் வைத்துக்கொள்ளவில்லை.

சொத்தை எழுதிக் கொடுத்த பிறகு தான் மகன்களின் உண்மையான சொரூபம் பெற்றோர்களுக்கு தெரிய வந்துள்ளது. மூத்த மகனான ரத்தினவேல் அடித்து துன்புறுத்தியதால் இத்தம்பதி வீட்டை விட்டு வெளியே சென்றனர். பல இடங்களில் தங்கி உணவின்றி வாடிய அவர்களை கொரோனாவும் அச்சுறுத்தி வந்தது. இதனை தொடர்ந்து மீண்டும் தங்களது ஊருக்கு திரும்பிய தம்பதி சொந்த வீட்டில் தங்கியுள்ளனர்.

அங்கு வந்த மூத்த மகன் ரத்தினவேல் மீண்டும் பெற்றோர் என்றும் பாராமல் அடித்து துரத்தி உள்ளான். இதனையடுத்து வேறு வழி இல்லாத தம்பதிகள் ஓமலூர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மகனிடமிருந்து தங்கள் வீட்டை மீட்டு தரும்படியும் தங்கள் உயிரை காப்பாற்றும் படியும் புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து உடனடியாக விசாரணையை தொடங்க டிஎஸ்பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |