Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சொத்து தகராறில்…. உறவினர்களே செய்த கொடூரம்…. திருக்கோவிலூர் அருகே பயங்கரம்….!!

சொத்து தகராறில் அண்ணனை அடித்து கொலை செய்த தம்பி உள்பட 4 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவான 3 பெண்களை தேடி வருகின்றனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்துள்ள ஐம்படை பகுதியில் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு இவரது தம்பி சந்திரசேகர் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்பகை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி சக்கரவர்த்தி இருவருக்கும் பொதுவான இடத்தில் இருந்த மரத்தை வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அண்ணன்-தம்பிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்திரசேகர் அவரது மைவி சஞ்சய், மகன் சஞ்சய், மருமகள் ஜெயந்தி மற்றும் உறவினர்கள் என மொத்தம் 7 பேர் ஒன்று சேர்ந்து சக்கரவர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்தகாயமடைந்து மயங்கிய சக்கரவர்த்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சக்கரவர்த்தியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குபதிவு செய்து சொந்த அண்ணன் என்றும் பாராமல் அடித்து கொலை செய்த சந்திரசேகர், சஞ்சய், ஆட்டுக்காரன், செல்லம்மாள் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஜெயந்தி, இந்திரா, ரகுமதி ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |