சொத்து வரியை செலுத்தாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் சொத்து வரி செலுத்தாதவர்கள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்த குறிப்பிட்ட தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனையடுத்து சொத்து வரியை செலுத்த தவறியவர்கக்கும் 2% அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
அதன்பிறகு மறு சீராய்வு செய்த பிறகே சொத்து வரி உயர்வு குறித்த முழுமையான அறிவிப்பு வெளியாகும். இந்த சொத்து வரியை இ-சேவை மையங்களிலும், மாநகராட்சி இணையதளம், நம்ம சென்னை செயலி, கிரடிட் மற்றும் டெபிட் கார்டு, பேடிஎம், மாநகராட்சி வரி வசூலிப்பவர்கள் மற்றும் உரிமை ஆய்வாளர்கள் மூலம் செலுத்தலாம். எனவே சென்னையில் உள்ள சொத்து உரிமையாளர்கள் உடனடியாக சொத்து வரியை செலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.