ஒடிசா மாநிலத்தில் பல அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்களின் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி பணம் பறித்து சொகுசுவாழ்க்கை வாழ்ந்த அர்ச்சனாநாக்(26) என்ற இளம் பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒடிசா மாநிலத்தின் கலஹண்டி மாவட்டத்திலுள்ள ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அர்ச்சனாநாக், தற்போது சொகுசுகார்கள், 4 உயர் இன நாய்கள் மற்றும் 1 வெள்ளை குதிரையுடன் ஆடம்பரமான அரண்மனை வீட்டை வைத்திருக்கிறார். இவர் 4 வருடங்களில் 30 கோடி குவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது நடுத்தர குடும்பத்தினைச் சேர்ந்த அவர் சொகுசு வாழ்க்கைகாக, அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், தயாரிப்பாளர்கள் என பிரபலமானவர்களைக் குறி வைத்து அவர்களுடன் நெருங்கி பழகிவந்துள்ளார்.
அதுமட்டுமின்றி அவர்களுடன் தனியாக அறையிலிருந்த போது அதனை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இதற்கிடையில் அர்ச்சனாவின் கணவர் ஜெகபந்து, பழைய கார்களை விற்பனை செய்யும் ஷோரூம் நடத்திவந்தார். இதன் காரணமாக அரசியல் வாதிகள், பில்டர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் போன்ற பணம் படைத்தவர்களை அவர் நன்கு அறிந்திருந்தார். இதன் வாயிலாக பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களுடன் அர்ச்சனா நட்பாக பழகி, அவர்களுக்கு பெண்களை சப்ளை செய்ததாக கூறப்படுகிறது. அப்பெண்களுடன் விடிய் விடிய நெருக்கமாக உள்ள படங்களை எடுத்து, பணம் கேட்டு மிரட்டியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அதன்பின் இந்த வீடியோக்களை அர்ச்சனா காட்டி அவர்களிடம் பணம் பறித்துள்ளார்.
இக்குற்றங்கள் அனைத்திற்கும் அவரது கணவர் ஜெகபந்து உடந்தையாக இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது காவல்துறையினர் அர்ச்சனாவை கைது செய்ததோடு, புவனேஸ்வரிலுள்ள அவரது வீட்டிலிருந்து 4 செல்போன்கள், 2 டேப்லெட்டுகள், 1 லேப்டாப் மற்றும் பென்டிரைவ் போன்றவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றில் ஆய்வு மேற்கொண்ட போது பல்வேறு முக்கிய பிரபலங்களின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சிக்கியுள்ளது. மொத்தம் 18 எம்எல்ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட 25 அரசியல் தலைவர்கள் அர்ச்சனாவின் நெட்வொர்க்கில் உள்ளதாகவும், அவர்களில் ஏராளமானோர் பிஜேடி கட்சியைச் சேர்ந்தவர்கள் எனவும் பாஜக புவனேஸ்வர் பிரிவுத்தலைவர் பாபு சிங் கூறியிருக்கிறார். எனினும் இந்த குற்றச்சாட்டுகளை பிஜேடி மறுத்திருக்கிறது.